Chief Secretary of Tamil Nadu meets Governor!

Advertisment

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 15,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 4,640 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,08,855 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 14,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 9,90,919 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கரோனாதடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றுவரும்இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பங்குபெற்றுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.