/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3976.jpg)
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, துறை அதிகாரிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அரசின் அனைத்து துறை அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனைப் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடித உத்தரவு அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)