Advertisment

பட்டியலின தலைவர்கள் தேசியக் கொடியேற்றுவதை  உறுதி செய்ய வேண்டும் - தலைமைச் செயலர் இறையன்பு 

Chief Secretary iraianbu leaders belonging  Scheduled Caste communities should ensure flag hoisting  Republic Day

Advertisment

நாடு முழுவதும் வரும் 26 ஆம் தேதி குடியரசு தினவிழாகோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பட்டியலினபஞ்சாயத்து தலைவர்கள் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த குடியரசு தின விழாமற்றும் சுதந்திர தின விழாக்களில் சில இடங்களில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களை கொடியேற்றக்கூடாதுஎன்று சொல்லி மாற்று சமூகத்தினர் கொடி ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடங்களில் எந்த விதசாதி பாகுபாடுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் குடியரசு தின விழாவில் கொடி ஏற்றுவதைஉறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அதில் குடியரசு தினவிழாவையொட்டி அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட 15 அறிவுரைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

iraianbu
இதையும் படியுங்கள்
Subscribe