வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனையில், வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில்,அதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் கூறுகின்றன.