Advertisment

சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை!

 Chief Secretary consults with non-Chennai District Collectors !!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் ஒரே நாளில்5,136 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் நேற்றுஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,472 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டது.இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,92,966 அதிகரித்தது.

Advertisment

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா அதிகரித்து வரும் நிலையில், பொதுமுழுமுடக்கம் வரும்ஜூலை 31- ஆம் தேதி முடிவடைகிறது. அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முடிவெடுக்க சென்னை தவிர்த்து, பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர்களுடன்தலைமை செயலர் சண்முகம் ஆலோசனை ஈடுபட்டிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியர்களுடன்காணொலிமூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

District Collector meetings Chennai corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe