Chief Secretary consults with collectors!

Advertisment

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்திருந்தாலும், ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு4,549 பேருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது சென்னை தவிர பிறமாவட்டங்களில் ஒரே நாளில் 3,392பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன்தலைமைசெயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ளசென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர். கரோனா தடுப்புபணிகளைத் தீவிரப்படுத்தியது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.