Chief Secretary consults with all departmental secretaries!

Advertisment

அனைத்துத்துறை செயலாளர்களுடன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகச் சென்னை கலைவாணர்அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு முதல்வரும் துறையின் அமைச்சர்களும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். இக்கூட்டத்தில் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், பேரவைச் செயலாளர் சீனிவாசன், உள்துறைச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட அனைத்துத்துறை செயலாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.