முதல்வர் வருகை... கடைகளை அடைக்க வலியுறுத்தும் போலீஸ்!

Chief Minister's visit ... Police urge to close shops!

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் தொகுதியின் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ராஜலட்சுமியின் இல்லப் பூப்புனித நன்னீராட்டு விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் வருகை தர உள்ளனர். இதற்கான விழா ஏற்பாடுகள் சங்கரன்கோவிலில் உள்ளசேர்ந்தமரம் சாலையில் மெகா பந்தல் அமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால் அந்தப் பகுதிகளின் கடைகளை காலை நேரம் அடைப்பதற்கு போலீஸ் வற்புறுத்தியது.

Chief Minister's visit ... Police urge to close shops!

அதன் காரணமாக டிச. 23 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை கச்சேரிரோடு, புளியங்குடி ரோடு, தெற்கு ரதவீதிப் பகுதிகளின் கடைகளை அடைப்பதற்கு நகர வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் நகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமும், மேற்படி பகுதிகளின் கடைகளை அடைப்பதற்கு வேண்டுகோளடங்கிய நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இது குறித்து வர்த்தக சங்கத்தின் உறுப்பினர் ஒருவரிடம் கேட்டதில், முதல்வர் வருகையால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் கடைகளை அடைப்பதற்கு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால் நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறோம் என்றார்.

edappadi pazhaniswamy police shops thenkasi
இதையும் படியுங்கள்
Subscribe