Advertisment

முதல்வரின் டெல்லி பயணம்... எம்.பிக்களுக்கு உத்தரவிட்ட டி.ஆர்.பாலு!

Chief Minister's visit to Delhi ... TR Balu orders MPs!

Advertisment

வரும் 17ஆம் தேதி காலை தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார்.

Advertisment

இதில், நீட் தேர்விலிருந்துதமிழ்நாட்டுக்கு விலக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கான தேவைகளை செய்ய வேண்டும், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்பன போன்ற பல்வேறு நலன் சார்ந்த விஷயங்களை வலியுறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டாலினின்டெல்லி பயணம் உறுதியாகியுள்ள நிலையில், முதல்வரின் வருகையை ஒட்டி திமுக எம்.பி.க்கள் டெல்லி வர வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவை, மக்களவை எம்.பி.க்கள் டெல்லி வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Delhi tr balu
இதையும் படியுங்கள்
Subscribe