Chief Minister's surprise inspection at Government Rehabilitation Home

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் அமைந்திருக்கும் அரசு மறுவாழ்வு மையத்தில் தமிழக முதல்வர் திடீரென ஆய்வில் ஈடுபட்டார். மேலும் அங்குள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் திமுக சார்பாக நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்திற்காக அண்மையில் பல மாவட்டங்களுக்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு அரசுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் மீண்டும் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என திட்டத்தில் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் அமைந்துள்ள அரசு மறுவாழ்வு இல்லத்திற்குச் சென்ற முதல்வர், அங்கு இருக்கின்ற முதியவர்களிடம் அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டிருந்தார். பின்னர் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் இருந்தனர்.