Chief Minister's participation in the event! Minister KN Nehru inspected the arrangements!

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 26ஆம் தேதி திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, முக்கொம்பு மேலணையில் இன்று நேரில் ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய விழா முன்னேற்பாடுப் பணிகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Chief Minister's participation in the event! Minister KN Nehru inspected the arrangements!

அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, ராஜா காலனியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போக்குவரத்திற்கு இடையூறின்றி மின்கம்பங்களை மாற்றி அமைத்து, குடியிருப்புகளுக்கு மின் சேவை வழங்கிட மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.