
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டத்துறை, நகர்புற வளச்சி துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் பேசிய முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நகர்புற வளர்ச்சி துறை சார்பாக வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், " அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் மறைந்த கலைஞர் அவர்களுக்கு சிலை அமைக்கப்படும். சட்ட வல்லூநர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இதற்கான வேலைகள் துவங்கும்" என தெரிவித்தார். ஏற்கனவே திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்திருந்தனர். சென்னை அண்ணா சாலையில், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்டோர்களுக்கு ஏற்கனவே சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.