'முதல்வர் வேட்பாளர், கூட்டணி தீர்மானம்...' - கூடியது ம.நீ.ம பொதுக்குழு! 

 Chief Ministerial Candidate, Coalition Resolution ... mnm  General meeting

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (11.02.2021)சென்னை வானகரத்தில் துவங்கியுள்ளது.

இன்று நடக்க இருப்பதுமக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம் ஆகும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதா என்பது குறித்த முக்கிய அரசியல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல்பிப்ரவரி 21ஆம் தேதி நடக்கும் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் பற்றியும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தொடங்கியுள்ள கூட்டத்தில், 600க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யஉறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராகமுன்னிறுத்திதீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதேபோல்கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணிஅமையும்என்பதுபோன்ற 20தீர்மானங்கள்நிறைவேற்றப்படும் எனதகவல் வெளியாகியுள்ளது.

kamalhaasan Makkal needhi maiam meetings
இதையும் படியுங்கள்
Subscribe