The Chief Minister will inspect the rainwater drainage works tomorrow

மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Advertisment

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

முன்னதாக கடந்த 2 ஆம் தேதி சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அசோக் நகர் 4 ஆவது நிழற்சாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.