Skip to main content

கடவுள் பக்தியால் கல்லூரியை நிராகரித்த முதல்வர் எடப்பாடி!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018


கடந்த இரண்டு நாட்களாக சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு கட்சித் தொண்டர்களின் விழாக்கள், தொண்டர்கள் சந்திப்பு மற்றும் கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நேற்று மாலை சென்னை திரும்பினார்.

 

 

இதனிடையே சேலத்திலேயே இரண்டு நாட்கள் இருந்து கொண்டு அதுவும் கருப்பூருக்கு வரும் முதல்வர் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மாணவர் பயன்பாட்டுக் கட்டிடங்களை திறப்பதாக இருந்த நிலையில் அந்த கட்டிடத்தை திறக்காமல் சென்னையில் இருந்த படியே இன்று காணொலி காட்சிமூலம் திறப்பது ஆச்சரியமாக உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

முதல்வருக்கு உள்ள கடவுள் பக்தியும் இந்த சாமிக்கு ’இன்னொரு சாமி ஒருவர் உங்களுக்கு நேரம் சரியில்லை’ என்றும் இதற்கு முன் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் பெரியார் பல்கலைகழகத்திற்கு வந்த பின்னர் அவருடைய ஆட்சி பறிபபோனதாகவும், அதனால் ஜெயலலிதா பெரியார் பல்கலைக்கழகம் பக்கமே தலையை காண்பிக்கவில்லை என்றும் ரகசியமாக சொல்ல, தனக்கும் தற்போது எட்டுவழிச் சாலையோடு எட்டு பிரச்சனை வருகிறது என்றும் சாமிஜி சொன்னதையே முதல்வர் அவர்களும் பின்பற்றி சேலத்தில் இருக்கும் போது பெரியார் பல்கலைக்கழக கட்டிடத்தை திறக்காமல் சென்னை சென்று காணொளி காட்சி மூலம் திறக்கவுள்ளார்.

திராவிட கட்சியின் மூலமாக முதல்வராக இருக்கும் இவரே இப்படி செய்வது என்பது பெரியாரின் பகுத்தறிவு இன்மை ஆகும் என பெரியாரின் தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்