திருச்சியிலிருந்து நேற்று காலை பெரம்பலூர் வருகை தந்த முதல்வர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இறையூர் அருகே கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சுமார் 300 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பிறகு ஆட்சி மாற்றத்தின் காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் அந்தப் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.11.2022) அரியலுார் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.