/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chief443322.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (20/11/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக இயக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 15 பணியாளர்களின் வாரிசுத்தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., சமூகநலன் மற்றும் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இ.ஆ.ப., சமூக நலத்துறை இயக்குநர் த.இரத்னா இ.ஆ.ப., சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் ச.வளர்மதி இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)