விருதுநகரில் வருகிற 15ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திமுக முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது. திமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் செய்துவருகின்றனர். பட்டம்புதூரில் முப்பெரும் விழா நடைபெறவுள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நெல்லை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரைக்கு காரில் திரும்பும்போது, வரும் வழியில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளைக் காரில் வந்தபோதே பார்வையிட்டார். விழா ஏற்பாடுகள் குறித்து இரண்டு அமைச்சர்களிடமும் கேட்டறிந்த மு.க.ஸ்டாலினை, கட்சி நிர்வாகிகள் சால்வை வழங்கி வரவேற்றனர்.