J

Advertisment

அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாள் கைத்தறி ஆடைகளை அணிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த அறிவுறுத்தலுக்கு கைத்தறி நெசவாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.