கரோனா தொற்று காரணமாக வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பலரும் அவர் உடல் நலம் பெற வேண்டும் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.
'முதல்வர் தொடர்ந்து உடல்நலம் தேறி வருகிறார். மேலும் சில நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும்' என காவேரி மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்திருந்த நிலையில் நாளை முதல்வர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாகவும், இருப்பினும் வீட்டிலிருந்து முதல்வர்ஒரு வாரம்ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.