Advertisment

ஐபிஎல் காண வந்த தமிழக முதல்வர்

 Chief Minister of Tamil Nadu watched IPL

16 ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றும் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன.

Advertisment

கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி, அனைத்து அணிகளையும் அணி வீரர்களையும் விஞ்சி ரசிகர் பட்டாளத்துடன் தொடரின் நாயகனாக திகழ்கிறார். முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர்களும் தோனியைப் புகழ்ந்து வரும் நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் தோனியை புகழ்ந்துள்ளார்.

Advertisment

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி என்ற நிலையில் சன் ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இன்று சட்டப்பேரவை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐபிஎல் போட்டியைக் காண சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார்.

CSK IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe