Advertisment

நரிக்குறவர், இருளர் இனத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர்! (படங்கள்) 

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (05/11/2021) வழங்கினார். அதைத் தொடர்ந்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அதேபோல், முதலமைச்சருடன் பயனாளிகள் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மரு.எம். சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர் து. செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

Chengalpattu Tamilnadu chief minister
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe