
தாம்பரத்தில் நடைபெற்ற விழாவில் தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வசந்தகுமாரியின் ஆண் குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 'திராவிட அரசன்' எனப் பெயர் சூட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேரவையின் 81-வது மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் முதல்வர் திமுக நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன் தனது கை குழந்தையுடன் முதல்வர் ஸ்டாலினிடம் ஆசிபெற்றார். “இன்னும் பேர் வைக்காம இருக்கோம் நீங்கதான் பேர் வைக்கணும் என் மகனுக்கு” என்று கூறினார். உடனே முதல்வர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் குழந்தையைத் தூக்கி 'திராவிட அரசன்' என்று பெயர் வைத்தார்.