Advertisment

தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கி கெளரவித்த தமிழக முதல்வர்

The Chief Minister of Tamil Nadu honored with the awards of Tamil Nadu Government

Advertisment

தமிழ்நாடு அரசு சார்பில், 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேதகர் விருது நேற்று (12-01-24) அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்பு குழுத் தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.சண்முகம் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (13-01-24) தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கும், பெருந்தலைவர் காமராஜர் விருது உ.பலராமனுக்கும் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் விருது சமூக நீதி கண்காணிப்பு குழுத் தலைவர் சுப.வீரபாண்டியனுக்கும், அம்பேத்கர் விருது பி.சண்முகத்திற்கும் வழங்கப்பட்டது.

Award
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe