Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில், வண்டலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/11/2021) நேரில் வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு உணவு வழங்கினார்.

Advertisment

இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.