Advertisment

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஸ்பெயின் பயணம்!

Chief Minister Stalin's trip to Spain today

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

Advertisment

அந்த வகையில் அண்மையில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisment

மாநாட்டைத்தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று இரவு சென்னையிலிருந்துவெளிநாடு செல்லவுள்ளார். இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்கிறார். பின்பு அங்கிருந்து ஸ்வீடன் சென்று அதன் பிறகு ஸ்பெயின் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு பல்வேறுதொழிலதிபர்களை சந்தித்துப் பேசிவிட்டு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe