Advertisment

“முழு உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும்” - விஜயகாந்த்திற்கு முதல்வர் வாழ்த்து

Chief Minister Stalin wishes Vijayakanth on his birthday

Advertisment

தேமுதிக கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. மேலும் விஜயகாந்த் இன்று சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்து கட்சித்தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்குத் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தே.மு.தி.க நிறுவனத் தலைவரும்எனது தோழருமான விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்” என வாழ்த்தியுள்ளார்.

dmdk vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe