‘உங்கள் தொகுதியில் முதல்வர்’திட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி உட்கோட்டம் சிறப்பாகச்செயல்பட்டதைப் பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் யாஸ்மினை நேரடியாகத்தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி உட்கோட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து புகார்கள் தொடர்பாக 97% தீர்வு கண்டு சிறப்பாகச் செயல்பட்டதற்காக இன்று 02.12.2022 முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்யாஸ்மினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நேரடியாகப் பாராட்டுக்களைத்தெரிவித்தார். முதல்வர் காவல்துறை அதிகாரியை நேரடியாகத்தொடர்பு கொண்டு பாராட்டிய சம்பவம் முசிறி சரக காவல் துறையினரை மனமகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.