Skip to main content

உறுதியானது முதல்வர் மு.க.ஸ்டாலின் - மோடி சந்திப்பு!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

Chief Minister stalin Modi meeting is certain!

 

நேற்று (14.06..2021) தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பேசுகையில், ''வரும் 17ஆம் தேதி காலை தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவருக்கு 10.30  மணிக்குப் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்திப்பதற்கான நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

 

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். இதில் நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து விலக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கான தேவைகளை செய்ய வேண்டும், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்பன போன்ற பல்வேறு நலன் சார்ந்த விஷயங்களை வலியுறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த சந்திப்பு முடிந்த பிறகு 18ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“90% மக்களுக்கு பணத்தைப் பகிர்ந்தளிப்பேன்” - பிரதமருக்கு ராகுல் காந்தி அதிரடி பதில்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says I will distribute money to 90% people

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்திருந்தார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

Rahul Gandhi says I will distribute money to 90% people

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தைத் தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்தார்.

Rahul Gandhi says I will distribute money to 90% people

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதில் பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீது தான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

90 சதவீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நான் கூறியதாக பிரதமரும், பா.ஜ.கவும் என்னை விமர்சிக்கிறார்கள். காங்கிரஸின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையைக் கண்டு பிரதமர் பயந்துவிட்டார். ஓ.பி.சி மற்றும் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஏழைகள் பட்டியலில் இருப்பார்கள். ஆனால் பணக்காரர்கள் பட்டியலில் அவர்களைக் காண முடியாது. ராமர் கோவில் மற்றும் பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் ஒரு பட்டியலினத்தவர், பழங்குடியினரை கூட பார்க்கவில்லை. 90% மக்கள் இதை புரிந்துகொள்கிறார்கள்.

யாருடைய பணம் ஊடகங்களுக்கு செல்கிறது? அரசு பணம் கொடுக்கிறது. ஜி.எஸ்.டியில் யாருடைய பணம் வருகிறது? இது 90 சதவீத மக்களின் பணம். நான் நீதித்துறையைப் பார்த்தேன். 650 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். ஆனால், 90 சதவீத மக்கள் 100 நீதிபதிகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். அது மிகச் சிறியவர்கள், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அடைவதற்குள் அது முடிந்துவிட்டது. 25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார்.