/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_157.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் மூத்த மகன் அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக உயர் ரக மருத்துவச் சிகிச்சை மற்றும் பிசியோதெரப்பிக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 14.03.2024 தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்துக்கு நாடாளுமன்ற தொகுதி பிரச்சாரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் மு.க.அழகிரியின் குடும்பத்தாரை சந்தித்து துரையின் உடல் நலம் குறித்துவிசாரித்தார்.
அப்போது அவருடன் துர்கா ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இருந்தனர். மருத்துவர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டு அறிந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)