கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

Chief Minister Stalin  honor at the kalaignar memorial

முதல்வர் ஸ்டாலின், கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டிஅவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்வரும், 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராகவும் இருந்தவருமான கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து தொடங்கிய இந்த அமைதிப் பேரணி கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைந்தது. பேரணியை நிறைவு செய்த முதல்வர், அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், முன்னாள்முதல்வர் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ,ராசா, உதயநிதி, நேரு எனதிமுகவின்எம்.பிக்கள், அமைச்சர்கள் என முக்கிய நிர்வாகிகள் பலரும் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

kalaignar
இதையும் படியுங்கள்
Subscribe