Advertisment

             நெல்லை ஸ்ரீநரஸிம்ஹர் ஆலயத்தில் இலங்கை மாகாண முதல்வர்!

vigbeswaran

ஸ்ரீநரஸிம்ஹர் ஆலயத்தில் இலங்கை மாகாண முதல்வர். நான்கு நாள் ஒய்வுப் பயணமாக ஏப்14 அன்று நெல்லை வந்த இலங்கை வடக்கு மாகாணத்தின் முதல்வர் விக்னேஸ்வரன் அன்றைய தினம் குற்றாலம் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

Advertisment

இன்று (ஏப்15) நெல்லை மாவட்டத்தின் கீழப்பாவூரிலிருக்கும் ஸ்ரீநரஸிம்ஹர் ஆலய வழிபாடு பொருட்டு காலை பத்து மணியளவில் வந்தார்.

Advertisment

நாளை என்றில்லாமல் இன்றே காரியங்களை நடத்தி முடித்திட வேண்டும். போரில் எதிரிகளை வெல்வதே லட்சியம் என்ற இலக்கோடு 16 கைகளோடு இந்த ஆலயத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் ஸ்ரீநரம்ஸிஹர். தன் பக்தன் பிரகலாதனைக் காப்பாற்ற வேண்டி அசுரனான அவனது தந்தை இரணியனை வதம் செய்வதற்காக பிரகலாதனின் பக்தியை மெச்சி ஸ்ரீநரஸிம் ஹராக 16 கரங்களோடு அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரணியனை வதம் செய்ததாக வரலாறு. மேற்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பவர். இந்த ஆலய வழிபாட்டிற்காக வந்த இலங்கை மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை ஆலய பட்டர் வரவேற்றார். பின்னர் அவர் அர்ச்சனையோடு ஸ்ரீநரஸிம்ஹரை வழிபட்டார்.

Nellai Srinarasimhaar temple Sri Lanka chief minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe