/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court_37.jpg)
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (17/09/2021) விசாரணைக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கட்சித் தலைவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து, நீதிபதி நிர்மல்குமார், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்பந்திக்கக்கூடாது சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்குகளின் விவரங்களை அட்டவணையாகத்தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, தன் மீதான அவதூறு வழக்குகளை ரத்துசெய்யக்கோரும் முதலமைச்சரின் மனுக்களில் வரும் அக்டோபர் மாதம் 8- ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)