Advertisment

பிரதமரை வரவேற்க கடற்படை தளத்திற்கு விரைந்தார் தமிழக முதல்வர்!

பிரதமர் மோடி தமிழகம் வந்தார். தற்பொழுது அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ள அவரை தமிழக ஆளுநர் வரவேற்றார். முன்னதாக அவரை வரவேற்பதற்காக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தற்பொழுது சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு செல்லும் மோடியை தமிழக முதல்வர் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது பிரதமரை வரவேற்க விரைந்தார் தமிழக முதல்வர். அதனையடுத்து அங்கிருந்து தரை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்லும் பிரதமர் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு இன்று மாலை 7.30 மணிக்கு டெல்லி திரும்பும்படி பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe