Chief Minister Relief Notification on Truck collision accident in Toppur Kanavai area

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் நிலையில், நேற்று (24-01-24) தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் இரண்டு கார்களும் ஒரு லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்தது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது. இதனால் அங்கு கோர விபத்து ஏற்பட்டது. காரிலிருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்குத்தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2024மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர்டவுன்ஹால், அசோக் நகரைச்சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23) ஜெனிபர் (29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

Chief Minister Relief Notification on Truck collision accident in Toppur Kanavai area

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment