திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sreenivasan in.jpg)
75 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய இவர் "கடந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலின்போது இந்த ஆட்சி கவிழ்ந்து விட வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தது, பல சூழ்ச்சிகள் நடைபெற்றன.
இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகள் வென்றதின் மூலம் இந்த ஆட்சியே தமிழகத்தில் தொடர வேண்டுமென மக்கள் தீர்ப்பு அளித்தனர். ஒன்பது தொகுதிகளில் நிலக்கோட்டை தொகுதி மக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேன்மொழியை ஜெயிக்க வைத்தீர்கள். அதன் மூலம் தொகுதி மக்கள் அனைவரும் தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடியின் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டீர்கள்".
மேலும் இவர்,"உங்களால் தேன்மொழி எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரியவர் பட்டியலில் சேர்ந்துவிட்டார். அதனால் இந்த தொகுதிக்கு தேன்மொழி எதை கேட்டாலும் செய்து தருவதற்கு அண்ணன் எடப்பாடி தயாராக உள்ளார். அதனால் நிலக்கோட்டை தொகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு முழு ஆதரவை தருவது மூலம் உங்களுக்கு அனைத்தையும் செய்ய இந்த அரசு தயாராக உள்ளது" என்று பேசினார்.
இந்த விழாவில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி உள்பட அதிகாரிகளும் கட்சிக்காரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Follow Us