சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருதை நேரில் வழங்கினார். 'தகைசால் தமிழர்' விருதுடன் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விருதுடன் அளித்த ரூபாய் 10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் என்.சங்கரய்யா.

Advertisment

இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisment

தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதை அறிவித்தது. இந்த தமிழர் விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமை என்.சங்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது.