Chief Minister presents check to chess player Viswanathan Anand

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (07/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு, 2020ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற உலக சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக ரூபாய் 20 லட்சத்துக்கான காசோலை மற்றும் 2021ஆம் ஆண்டு ஃபிடே (FIDE) உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.