Advertisment

இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ள இளைஞர் ரஞ்சித்துக்கு முதலமைச்சர் பாராட்டு!

Chief Minister praises Ranjith who has been selected for the Indian Civil Service!

இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தியக் குடிமைப் பணிக்குத்தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்; சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள்.

Advertisment

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் தேர்வு பெற்றதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. தேர்ச்சிபெறாதோர் துவள வேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள்.

வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன்". இவ்வாறு முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister Indian Civil Service Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe