Chief Minister praises actor Sathyaraj

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ் பேரவையின் பொன்விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கலைத்துறையில் பயணித்து வருபவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அந்த வகையில், நடிகர் சத்யராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கலைஞர் விருது’ வழங்கினார்.

Advertisment

அதனை தொடர்ந்து, இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால், மிக மிக தகுதி வாய்ந்தவருக்கு அந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு கலைஞர் விருது வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். கலைஞருடைய வசனத்தைப் பேசி நடித்தவர், தந்தை பெரியாராகவே வாழ்ந்து காட்டியவர்.

Advertisment

ஆகவே அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கலை உலகத்தில் இருந்துகொண்டே தன்னுடைய பகுத்தறிவு உணர்வை, சுயமரியாதை எண்ணத்தை திராவிட கொள்கைகளை மறைக்காமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல், துணிச்சலாக பேசக்கூடியவர் தான் சத்யராஜ். அவருக்கு மீண்டும் மீண்டும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.