தமிழ்நாடு முழுக்க கரோனா தடுப்பூசி முகாம் கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது. அதில் ஒன்றாக சென்னை, கண்ணகி நகரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியுடன், டாக்டர். அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் இணைந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை நடத்தினர்.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பார்வையிட்டனர். மேலும், கண்ணகி நகரில் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்திற்குப் பாராட்டுகளையும் தெரிவித்தார்.