Advertisment

“நாடாளுமன்றத் தேர்தலுக்குள் முதலமைச்சர் இவற்றைச் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளார்” - எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன்

publive-image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ வசந்தன் கார்த்திகேயன், கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர், நேற்று அவரது தொகுதியில் உள்ள பாசார் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கவும், கூடலூர், அவிரியூர் கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

Advertisment

சூலாங்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டுவரும் நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டதைத் திறந்து வைத்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசும்போது, “இந்தியாவிலேயே மிகவும் சிறப்பான அளவில் செயல்பட்டு வரும் முதன்மையான மாநிலம் தமிழ்நாடு. இதனால், பல்வேறு மாநில மக்களும் நமது முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisment

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்குமான திட்டங்களையும் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக பணியாற்றி வருகிறார். நமது பகுதியில் உள்ள அனைத்து கிராமத்துக்கும் தேவையான திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளின் துணையோடு விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமங்களின் தேவைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான புள்ளி விவரங்களைத்தயார் செய்து வருகின்றனர்” என்று எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன் பேசினார்.

விழாவில் அவருடன் ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கட்சிப் பொறுப்பாளர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe