தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/12/2021) சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் முதன்மைச் செயலாளர்/ உறுப்பினர் செயலர் மருத்துவர் சீ.ஸ்வர்ணா இ.ஆ.ப., சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சா.விஜயராஜ் குமார் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/mksa434322111.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/mksa43434344.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/mksa434322211.jpg)