Chief Minister pays tribute to Ambedkar portrait

Advertisment

சட்டமேதை அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அம்பேத்கரின் பிறந்தநாள்வருடந்தோறும்சமத்துவ நாளாக தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கோவி.செழியன் மற்றும் நாடாளுமன்ற எம்.பி ஆ.ராசா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர்கள் விடுதியை தமிழக முதல்வர் திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.