Advertisment

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதல்வர் மரியாதை

Chief Minister pays homage to statue of freedom fighter alagumuthukone

சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Advertisment

சுதந்திரப் போராட்ட வீரர்அழகுமுத்துக்கோன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் – பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு 11.07.1710 அன்று மகனாகப் பிறந்தார். தன் இளம் வயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக இருந்தார். அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர். இவரின் பிறந்த தினம் இன்று.

Advertisment

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போராட்ட வீரர்அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (11.07.2023) காலை 09.30 மணியளவில் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலரும்இருந்தனர்.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe