Advertisment

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சிவாஜி மண்டபத்தில் உள்ள சிவாஜி சிலைக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் திமுக அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். செவாலியே சிவாஜி கணேசனை சிறப்பு செய்யும் வகையில் கூகுள், டூடுல் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது.