கார்கில் போர் வீரர் சரவணன் நினைவுத்தூணுக்கு முதல்வர் மரியாதை 

Chief Minister pays homage to Kargil war veteran Major Saravanan memorial

கார்கில் போர் வெற்றி தினக் கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள போர் நினைவுச் சின்னங்களுக்கும்மரியாதை செலுத்தப்பட்டது.

அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாகமுதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கார்கில் போரில் உயிர் நீத்த மேஜர் சரவணன் நினைவுத்தூண் மற்றும் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

இதையடுத்து திருச்சி புரசக்குடியில் உள்ள மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பதிவு முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.

kargil trichy
இதையும் படியுங்கள்
Subscribe