Advertisment

தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

Chief Minister pays homage to Father Periyar statue

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Advertisment

தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் அமைந்துள்ள வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 10.15 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அப்போது அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வேலூர் மாநகராட்சி துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

pledge
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe