Chief Minister pays homage at Father Periyar Memorial!

Advertisment

தந்தை பெரியாரின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/08/2021) சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, துணை தலைவர் கலி பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.