சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்திருக்கும் தமிழக முதல்வரின் இல்லத்தில் இன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று, தமிழக முதல்வர் தாயாரின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினர்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரோஜா ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.